கற்பிட்டி முதலைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி முதலைப்பாளி முஸ்லிம் மகா வித்தியாலத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா  கடந்த வியாழக்கிழமை (24)  பாடசாலையின் அதிபர் எஸ்.பீ.எம் முசவ்வீர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து  சிறப்பித்தனர்.


மேற்படி ஸ்மார்ட் வகுப்பறைக்கான கூடிய பங்களிப்பினை  வேர்ல்ட் விஷன் நிறுவனம் வழங்கியிருந்ததுடன்  மேலதிக உதவித்திட்டங்களை பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கியதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார் 


இந்நிகழ்வின் போது சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடமபெற்றதுடன் ஆசிரிய ஆலோசர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,ண பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post

نموذج الاتصال