JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி மண்டலக்குடா முதியோர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

(கற்பிட்டி எம் எச் எம் சி்யாஜ் - றிஸ்வி ஹூசைன் , புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி மண்டலக்குடா முதியோர் சங்கத்தின்  பொதுக் கூட்டம் அண்மையில் கற்பிட்டியின் மூத்த உலமா மௌலவி இபாதுல்லாஹ்வின் தூஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்றது 


இதில் அதிதியாக கற்பிட்டி மண்டலக்குடா கிராம உத்தியோகத்தர் எம் றுமைஸ் கலந்து கொண்டார்.


சங்கத்திற்கான புதிய சட்டக் கோவை சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டு உருவாக்கப்பட்டது  அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையும் தெரிவு  செய்யப்பட்ட து.


தலைவராக எஸ்.எச். நௌபிக், 

உப தலைவராக வை  சௌக்கத் அலி,  செயலாளராக ஈ.எம்.ஜே ஏக்கநாயக்க,  உப செயலாளராக ஏ.என்.எம். சித்தி ஹலீமா,  பொருளாளராக ஏ.கே விஸ்வநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


மேற்படி மண்டலக்குடா முதியோர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் தொடர்ந்து அதிக நாட்கள் சங்கத்தின் கூட்டத்திற்கு சமூகமளித்த உறுப்பினராக சித்தி உம்மா என்பவர் தெரிவு செய்யப்பட்டு  அவரை கௌரவிக்கும் முகமாக விஷேட பரிசு ஒன்று வழங்கப்பட்டதுடன் ஏனைய சகல அங்கத்தவர்களுக்கும் பரிசு பொதி ஒன்று வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال