JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கரம்பை பாலத்திற்கு அருகில் விபத்து. இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து நேற்று இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும் புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال