JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம் ஸ்தாபிதம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரில் முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கென ஒரு சங்கத்தினை உருவாக்கும் தோரணையில் பல மாத கால விடா முயற்சியின் பலனாக "புத்தளம் முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம்" புதிதாக உதயமாகியுள்ளது.


புத்தளம் பிரதேச செயலகத்தின் அனுமதியோடு இந்த புதிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  


இதற்கான அனுமதி பத்திரத்தை புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகர, முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவரும், புத்தளம் கொழும்பு முகத்திடல் முச்சக்கர வண்டிகள் தரிப்பிட தலைவருமான எம்.எம்.எம். அனூஸ் மற்றும் அதன் அங்கத்தவர்களிடம் அண்மையில் கையளித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال