JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை இழந்தையடியில் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி நுரைச்சோலையின் இழந்தையடி கடற்கரை பகுதியில் பீடி இலைகளை கடந்த முற்பட்ட குழுவினரை நுரைச்சோலை பொலிஸார் சுற்றிவளைத்தை அடுத்து தப்பியோடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.      


ஞாயிற்றுக்கிழமை (06) நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.     


கைது செய்யப்பட்டவர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடம் இருந்து சுமார் 2500 கிலோ பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் வேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன           


இந்த பீடி இலைகள் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியானது எனவும் கைப்பற்றப்பட்ட லொறி மற்றும் வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال