JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நாளை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி ஜென்னத்துல் அஸாபீர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி புதன்கிழமை (30) பாடசாலையின் அதிபர் பாஹீமா தலைமையில் கற்பிட்டி புட்சல் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.



சிறார்களின் விளையாட்டு திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணரும் நோக்கோடு விளையாட்டுதுறையில் சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் வருடா வருடம் தமது பாலர் பாடசாலையில் விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அதிபர் மேலும் இவ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் சிறார்களுக்கும் மற்றும் போட்டடியில் பங்குபற்றும் சகல சிறுவர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும்  தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال