JobVibe.lk - Sri Lanka Job Portal

கடையாமோட்டைக்கு நாமல் வருகிறார் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்.

புத்தளம் மாவட்டத்தில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து  இடம்பெறும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நாளை (30) கடையாமோட்டையில் இடம்பெறவுள்ளது.


இந்நிகழ்விற்கு பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மொட்டு சின்னத்தில் போட்டியிடும்  பாராளுமன்ற வேட்பாளருமான  ஏ.எச்.எம். றியாஸின் அழைப்பின் பேரில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


குறித்த  நிகழ்வில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும்  பாராளுமன்ற வேட்பாளர்களான சட்டத்தரணி சாமர பெரேரா மற்றும் டொனில் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


காலம் :- 30.10.2024 புதன்கிழமை


நேரம்  :- மாலை 4.00 மணிக்கு 


இடம் :- மாகாண  சபை உறுப்பினர் ஏ.ச்.எம். றியாஸ்  இல்லம்.


 அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் ஏற்பாட்டாளர் ஏ.எச்.எம் றியாஸ்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال