(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி, ஆனைவாசல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ திருமுகமும் மகா நவராத்திரி விழாவும் கடந்த 2024/10/03 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தினசரி மாலை 05: மணிக்கு ஸ்நபனம், அபிஷேகம், அலங்காரம், வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று வருகின்றது
இந் நவராத்திரி விழா நிகழ்வின் ஏழாம் நாள் புதன் (09) இரவு தீ ( பூ) மிதிப்பு சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வினை கற்பிட்டி இந்து ஆலயத்தின் பிரதம குரு கிரியா கிரமஜோதி, கிரியா தத்துவநிதி வாமதேவ சிவாச்சாரியார் சிவ.ஸ்ரீ. ஸ்கந்த வரதேஸ்வரக் குருக்கள் நிகழ்த்தியதாக ஆலய நிர்வாக சபையின் தலைவர் ஜி. குபேந்திரன் தெரிவித்தார் .








