JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி - கனமூலையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) காரியாலயம் திறந்து வைப்பு!.

மதுரங்குளி கனமூலையில் கடையாமோட்டை வட்டாரத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம் இன்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் கடைமோட்டை வட்டார அமைப்பாளர்களான பீ.கே. பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் சந்தன அபேரத்தன மற்றும் புத்தளம் தொகுதி முஸ்லிம் பிரதேசங்களுகான அமைப்பாளர் எம்.ஜே.எம். பைஸல்  ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.


இதேவேளை  முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் எம். எப்.எம். ரமீஸ் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தககது.


இந்நிகழ்வு பரகாத் மற்றும் ரபீஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடனும், ஊர் மக்களின் பங்கு பற்றலுடனும் இடம்பெற்றதாக  எம்.எப்.எம். ரமீஸ் தெரிவித்தார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال