JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சோல்டன் காற்பந்தாட்ட கழகம் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் சோல்டன் காற்பந்தாட்ட கழகம் மற்றும் வவுனியா "வை 2 கே" காற்பந்தாட்ட அணிக்கும் இடையில் நடைபெற்ற சிநேக பூர்வ காற்பந்தாட்ட போட்டியில் 04 : 01 என்ற கோல் கணக்கில் புத்தளம் சோல்டன் காற்பந்தாட்ட கழகம் வெற்றி பெற்றது.


இந்த போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (08) வவுனியா விவேகானந்தா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


நடைபெற்ற இந்த போட்டியில் புத்தளம் சோல்டன் அணிக்காக ஏ.எம்.ஜெர்ஹீன்  02 கோல்களையும், ஐ.எப்.நிப்ராஸ், எம்.எஸ்.எம். அஹ்னப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும், " வை 2 கே" அணிக்காக முஹம்மது ஹபீஸ் 01 கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.


சோல்டன் அணியை ஏ.எம். ஜெர்சாத் தலைமை தாங்கி வழி நடாத்தி இருந்தார்.


புத்தளம் இரண்டாம் மைல் கல் சோல்டன் பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போல்டன் விளையாட்டு கழகம் பங்கேற்ற இரண்டாவது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال