JobVibe.lk - Sri Lanka Job Portal

நிந்தவூர் அல்-அஷ்ரக் மாணவன் ஹின்ஸான் 02 தங்கம் வென்று சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024இல் இரண்டாவது நாளான (08) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் நிந்தவூர் அல்-அஷ்ரக் மாணவன் எம்.எச். முஹம்மது ஹின்ஸான் 12 வயது ஆண்கள் பிரிவில் 60m (8.04Sec MMR-2024) மற்றும் 100M (13.30Sec -2024) ஆகிய இரண்டு ஓட்ட நிகழ்ச்சிகளிலும்  முதலிடங்களைப் பெற்று 02 தங்கங்களை வென்றுள்ளார்.


பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர், வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்துவதோடு, இதற்காக உழைத்த அனைத்து விளையாட்டு பொறுப்பாசிரியர்களுக்கும் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பாக இருந்து ஒருங்கிணைக்கும் உதவி அதிபர்கள், மாணவனின் பெற்றோர்கள் உட்பட்ட கல்வி சார் மற்றும் சாரா சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال