JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை தேசிய பாடசாலையின் இரண்டு மாணவிகள் சாதனை.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச.எம்.சியாஜ்

யாழ் சிதம்பரக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட கணிதப் போட்டியில் கலந்து கொண்ட நுரைச்சோலை தேசிய பாடசாலை மாணவர்களான ஆர். றஸா மனால் மற்றும் எம். ஹம்தா மனால் ஆகிய மாணவிகள் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.


அண்மையில் யாழ் சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இம்மாணவிகள் இருவரும் வெண்கலப்பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். 


பாடசாலைக்கு பெருமை சேர்த்த இவ்விரு மாணவிகளும் பாடசாலையில் அண்மையில் (6) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் மற்றும் கணிதப் பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال