JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியின் கண்காட்சி நாளை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரி மாபெரும் கண்காட்சி ஒன்றை நாளை (செப்டம்பர் 30) காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடாத்த திட்டமிட்டுள்ளது.


மாணவர்களின் திறமைகள் மற்றும் புதிய படைப்புகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு, கல்வி மற்றும் கலாச்சார விழுமியங்களை கொண்டதாக அமைய உள்ளமை சிறப்பம்சமாகும்.


கல்லூரியின் அதிபர் ரம்சானி பேகம் தலைமையில் இடம்பெற உள்ள இக்கண்காட்சியில முக்கிய அதிதிகளாக கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம் எம் எம் ரோஸ் புகாரி ,வை.எம்.எம் ஏ கற்பிட்டி கிளையின் ஆலோசகர் எச்.எம் சுஹைப் , தலைவர் ஏ.எச்.எம்.எம் ஷாபி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச உத்தியோகத்தர் எம்.டி சமீர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال