JobVibe.lk - Sri Lanka Job Portal

பரஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியுடனான சிநேகபூர்வ காற்பந்தாட்ட போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி வெற்றி.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் லிவர்பூல் அணிக்கும், பரஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணிக்கும் இடையிலான சினேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியொன்று சனிக்கிழமை மாலை (14) புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த சிநேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியில் 

லிவர்பூல் அணி 01 : 00 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.


இந்த போட்டியின் போது லிவர்பூல் அணிக்காக அதன் வீரர் முஹம்மது முப்தாஸ் கோலினை பெற்றுக் கொடுத்தார்.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எம்.சிபான், ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எஸ்.எம்.நௌபி ஆகியோர் கடமையாற்றினர்.


லிவர்பூல் அணிக்காக வேண்டி பல புதிய இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவும், புதிய வீரர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்காகவும் இந்த சினேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال