JobVibe.lk - Sri Lanka Job Portal

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம். புத்தளத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற இரத்த தான முகாம்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் குழுவினரான 2003 க.பொ.த.(சா/த) "சஹீரியன்ஸ் ட்யூட்ஸ்" அமைப்பினர் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் சனிக்கிழமை (14) காலை 8.30 இல் இருந்து மாலை 3.00 மணிவரை புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது..


"உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்" எனும் 

தொணிப்பொருளில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


புத்தளம் தள வைத்தியசாலையில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாகவும் அண்மையிலே புத்தளம் தள வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.


இதனை கருத்தில் கொண்டே இந்த பழைய மாணவர் சங்கம்

இரத்த தான நிகழ்வுதனை உடனடியாக ஏற்பாடு செய்திருந்தது.


பெண்களும் இரத்தம் தானம் செய்வதற்கான விரிவான பிரத்தியேகமான இட அமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இந்த இரத்ததான நிகழ்வில்  64 பேர் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 


புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர் வைஷ்ணவன் உள்ளிட்ட குழுவினர் இங்கு பணியில் ஈடுபட்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال