JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை தேசிய பாடசாலையில் தேசிய மீலாதுன்நபி விழா நிகழ்வுகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

நுரைச்சோலை தேசிய  பாடசாலையில் தேசிய மீலாதுன்நபி விழா நிகழ்வுகள் திங்கட்கிழமை (30) அதிபர் எம்.ஐ.எம்.இம்ரான்கான் தலைமையில் பாடசாலை வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் பேச்சு போட்டி, கவிதை, தனிப்பாடல்கள், குழுப்பாடல், கசீதாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களால் மிகவும் சிறப்பாக  அரங்கேற்றப்பட்டன. 


இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினை மாணவர்களுக்கு முன்மாதிரியாக்குவற்காக ஆசிரியர்களான பீ. ரொக்ஸ்மன், ஏ.சீ.எம். பஸ்லான் ஆகியோரால் இஸ்லாமிய கீதமும் பாடப்பட்டமையானது மாணவர் மத்தியில் வரவேற்கத்தக்கதாக காணப்பட்டது. 


போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இதன் போது சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال