JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியின் பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

கல்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. கிளையினரால் பதக்கமும்  சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர்.

 

இந்நிகழ்வானது செவ்வாய்க்கிழமை (24) கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஜவாத், கௌரவ அதிதிகளாக அல் அக்ஷா தேசிய பாடசாலை அதிபர் யூ.எம்.எம்.அமீர், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. புத்தளம் மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசார், அல் அக்ஷா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எம்.எம்.ரோஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

விழாவில் பல்கலைக்கழக  மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட 10 ஆசிரியர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

 

இதன் போது விஷேட நிகழ்வு ஒன்றாக அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال