JobVibe.lk - Sri Lanka Job Portal

கடையாமோட்டை தேசிய பாடசாலை மாணவன் எச். ஹஸீம் அம்லா வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை!.

யாழ் சிதம்பரக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட கணிதப் போட்டியில் கலந்து கொண்ட  பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி  (தேசிய பாடசாலை) யில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் எச். ஹஸீம் அம்லா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


அண்மையில் யாழ் சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இம்மாணவனுக்கு வெண்கலப்பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.


பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம்மாணவனை  பாடசாலையில் அண்மையில்   நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.தௌபீக்   அவர்களினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


மாணவன் எச்.ஹஸீம் அம்லா கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் என்.எம்.ஹிஸாம் அவர்களின் செல்வப் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال