JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சிங்கிதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் குருநாகல் வீதி சிங்கிதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு இல்லங்களை சேர்ந்த சுமார் 50 முன்பள்ளி மாணவர்கள் இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர்.


முன்பள்ளி பொறுப்பாசிரியை அமிதா எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி ரதி கலந்து கொண்டார்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.













Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال