JobVibe.lk - Sri Lanka Job Portal

ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் குருநாகலில் பெரும் மக்கள் வெள்ளத்துடன் இடம் பெற்றது.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மக்கள் அலை அலையாக வருகை தந்த வண்ணம் ஜனத்திரளைளை காணப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் வெள்ளிக்கிழமை (16) குருநாகலில் இடம் பெற்றது.


வியாழக்கிழமை 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து குருநாகலில் இடம் பெற்ற முதலாவது பிரச்சார கூட்டத்தில் பல்வேறு கட்சிகளுடைய தலைவர்கள் , பல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவின் வருகையின் போது மழை வெள்ளம் போல் கூடியிருந்த ஆதரவாளர்கள் கரகோஷம் செலுத்தியும்  வாழ்த்து கோஷங்களை தெரிவித்தும் மிகப்பெரியதொரு வரவேற்ப்பை வழங்கினார்.


இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் சட்டத்தரணி தயா ஸ்ரீ ஜெயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க டலஸ் அழகப் பெரும, அர்ஜுன ரணதுங்க, ஹர்ஷ டி சில்வா, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ண தில்ஷான் உட்பட பலரும் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.



















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال