JobVibe.lk - Sri Lanka Job Portal

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 22 பேர் கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இந்தியா தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 22 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன்  திங்கட்கிழமை (05) இரவு கற்பிட்டி வடக்கு கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்து கற்பிட்டி விஜய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்களிடம்  முதற்கட்ட விசாரணை செய்த பின்னர் இன்று நண்பகல் மீனவர்கள் 22 பேரையும் புத்தளம் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தன்ர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال