JobVibe.lk - Sri Lanka Job Portal

வெல்லும் சஜித் கற்பிட்டி பிரதேசத்தின் 18 கிராமங்களுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ எம் சனூன்)

கற்பிட்டியி பிரதேசத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்கும் நோக்குடன் "வெல்லும் சஜித்" என்ற கருப்பொருளில் கற்பிட்டி நகர ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம்.எப்.எம் றில்மியாஸ் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று குறக்கஞ்சேனை கூட்ட மண்டபத்தில் ஞாயிறு (25) இடம்பெற்றது.


இதில் புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி கலந்து கொண்டார்.


இதில் கற்பிட்டி தொடக்கம் பள்ளிவாசல்துறை வரையான உள்ளாள் 18 கிராமங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்கெடுப்பு நிலைய இலக்கங்கள் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் என்பனவும் கிராம மட்ட மக்கள் சந்திப்புக்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பன பற்றிய தெளிவு மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வின் வெற்றியை உறுதிப்படுத்தும் முக்கிய செயற்திட்டம் என்பன கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال