JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி அல் அக்ஸாவின் இருவர் கணித திறன் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற கணித திறன் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைச் சேர்ந்த தரம் 10 ல் கல்வி பயிலும் என்.பீ.பிரவீன் மற்றும் தரம் 06 ல் கல்வி பயிலும் என்.எம் நாசிப் ஆகிய இருவரும் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தெரிவித்துள்ளார்.


இவர்கள் இருவரின் வெற்றிக்கும் பங்களிப்பு செய்த பிட் ஆசிரியர்களான திரு நிசாந்தன் மற்றும் திருமதி பாரிஸா ஆகியோருக்கு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال