JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் வரலாற்றில் முதற்தடவையாக பிரபல காரிகளின் அல்குர்ஆன் ஓதும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற உள்ள வரலாற்றில் முதன் முறையாக அல்குர்ஆனை உலகில் பிரபலமான காரிகளினால் ஓதிக் காண்பிக்கப்படும் பிரமாண்டமான நிகழ்வு ஒன்று எதிர்  2024/08/03  ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 04 மணியிலிருந்து இடம்பெற உள்ளது.


இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் அல்காரி ஹாபிஸ் கம்றுல்  எல்லோர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.


இதில் முக்கிய நிகழ்வுகளாக பெரிய பள்ளிவாசலில் இயங்கி வந்த மதுரஸதுஹ் ரவுலத்துல் ஹாபிலின் மதுரஸாவை மீண்டும் ஆரம்பித்தல் , கிராக் அரங்கேற்றம் மற்றும் சான்றிதழ்கள்  வழங்குதல் என்பன இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال