புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்டபட்ட சமீரகம முஸ்லிம் வித்யாலயத்தின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தப்படுத்தும் நோக்கில் சுமார் 45, 000.00 ரூபாய் பெறுமதியான பள்ளூடகம் (மல்டி மீடியா ப்ரொஜெக்டர்) ஒன்று சமீரகமையைச் சேர்ந்த அப்துல் கலாம் முஹம்மது றிஸ்வி அவர்களால் நேற்று (25.06.2024) ஆந்திகதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவர் இப்பாடசாலைக்கு இதற்கு முன்பும் பணம் மற்றும் பொருள் ரீதியாக பல உதவிகளை புரிந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நளீமி) தெரிவித்தார்.
அல்லாஹ் இவரது இந்நிலையான தர்மத்தை அங்கீகரித்து அவரதும், அவரது குடும்பத்தினதும் உள,உடல் ஆரோக்கியத்திலும், ஈருலக வாழ்விலும் அருள் புரிந்தருள்வானாக!
மேலும் இதனை அன்பளிப்பு செய்த அப்துல் கலாம் முஹம்மது றிஸ்வி அவர்களுக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சார்பாக அவரது சேவையை பாராட்டி நன்றி தெரிவிப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.


