JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 



காங்கேசன்துறை   தொடக்கம் புத்தளம்,  கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் முல்லைத்தீவு  தொடக்கம் காங்கேசன்துறை,  மன்னார் ஊடாக புத்தளம்  வரையான   கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال