JobVibe.lk - Sri Lanka Job Portal

நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவது உறுதி - ஐ.தே.கட்சியின் வலய அலுவலக திறப்பு விழாவில் றபாத் அமீன்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஐக்கிய தேசிய கட்சியின் விருதோடை  வலய அமைப்பாளர் செயல்பாட்டு அலுவலகத்தை வியாழக்கிழமை (27) ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கபண்டார அவர்களின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளரும் கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட கரம்பை, விருதோட, பாலைச்சோலை கிராமங்களை உள்ளடக்கிய நான்காம் இலக்க வலய அமைப்பாளருமான விருதோடை ஏ.ஆர்.எம். றபாத் அமீன் திறந்து வைத்தார்.


இதன் போது உரையற்றிய றபாத் அமீன் :


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் எனவும் இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடுவார். என்பதுடன் இதில் சகல கட்சிகளும் அதாவது பொதுஜன பெரமுன, சிறி லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி என சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு கோடி வாக்குகளால் நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவது உறுதி என தெரிவித்தார்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال