JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக இர்பான் நியமனம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ  அபிவிருத்தி  நிலையத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தராக அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம் இர்பான் கல்வி அமைச்சினால் (இணைப்பு அடிப்படையில்)  நியமிக்கப்பட்டுள்ளார்.


 புத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் எம்.எப்.எம் றியாஸிடம் தனது நியமன கடிதத்தை ஒப்படைத்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட இர்பான் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரும், ஜாமிஆ நளீமிய்யா, பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரியும் ஆவார்.


 கடந்த காலங்களில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் ஆசிரியராகவும், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்  பகுதித்  தலைவராகவும், முகாமைத்துவ குழுவின் செயலாளராகவும் செயற்பட்டுள்ள இவர்  புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் பொது நிர்வாகப் பகுதி, ஆசிரியர் ஸ்தாபனப் பகுதி, கணக்குப் பகுதிகளில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال