JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ரத்மல்யாய மையவாடி பாதை பிரதேச மக்களினால் புனரமைப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் - புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (14) புனரமைக்கப்பட்டு கொங்றீட் இடப்பட்டது.


இம்முறை புத்தளத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் ரத்மல்யாய மையவாடி பாதை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத வண்ணம் காணப்பட்டது. இது விடயமாக கவனத்தில் எடுத்த பிரதேச மக்கள் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் , இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மேற்படி பாதையில் காணப்பட்ட பல்லங்களை முழுமையாக நிரப்பி நீர் வழிந்தோடும் வண்ணம் போக்கு வைக்கப்பட்டு பாதைக்கு கொங்றீட் இட்டு செப்பனிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை கடந்த வெள்ள அனர்த்தம்  காரணமாக போக்குகள் உடைந்து  பாதை வழியே பயணிகள் செல்வதற்கு சிரமமாக காணப்பட்டது. 


பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் இன்று வெள்ளிக்கிழமை  பாதையின் பள்ளங்கள் நிரப்பப்பட்டு, கொங்றீட் போடப்பட்டு மக்களின் பாவனைக்கு ஏற்பாடாக அப்பாதை வேலை முடிக்கப்பட்டது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال