JobVibe.lk - Sri Lanka Job Portal

சதுரங்க போட்டியில் அல் அக்ஸா மாணவி ஸபீஹா மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் வலய மட்டத்தில் இடம்பெற்ற சதுரங்க போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 09 ல் கல்வி கற்கும் மாணவி மொஹமட் சியாஜ் பாத்திமா சபீஹா 15 வயதிற்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை பாடசாலையின் நிர்வாகக் குழு சார்பாக பிரதி அதிபர் எஸ் எப் சாஜினாஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


கற்பிட்டி பெரிய குடியிருப்பு , வாழைத் தோட்டம் பகுதியில் வசிக்கும் மேற்படி மாணவி எம்.எஸ்.எப் சபீஹா கற்பிட்டியின் பிரபல ஊடகவியலாளர் எம்.எச்.எம் சியாஜ் மற்றும் ஏ.ஏ.எப் சியானா தம்பதிகளின் இளைய புதல்வியும் வயம்ப பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் மூன்றாம் வருட மாணவன் எம்.எஸ்.எம் சகீர் மற்றும் சாஜித். சிபாக் ஆகியோரின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال