JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் முள்ளிபுரத்தில் பாரம்பரிய கயிறு இழுத்தல் போட்டி

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஹஜ் பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை (17) முள்ளிபுரம்  பிளக் பெயார் குழுவினரால்ழ நடத்தப்பட்ட பாரம்பரிய கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்ததுடன் விசேட அதிதியாக முன்னாள் நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதுர்தீன் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் முள்ளிப்புரம் பிரதேசத்தின் இணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்..


பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் போட்டி  முள்ளிபுரம் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


கயிறுழுத்தல்  போட்டியில் புத்தளம் பிரதேசம் மட்டுமல்லாது மாவட்ட மட்டத்தில் பல அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال