வயம்ப SDIG கீத்சிரி மரியாதை நிமித்தம் புதிய ஆளுநரை சந்தித்தார்...!
ரஸீன் ரஸ்மின்
வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. கித்சிரி ஜயலத், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடமேல் மாகாணத்திலுள்ள குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாகாணத்தின் இயல்பு நிலையை பேணிக்கொள்வது குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாகாண ஆளுநர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
No comments