JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபையின் வெசாக் நோன்மதி தன்சல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு இன்று(24) சவ்வரிசி கஞ்சி வழங்கும் தன்சல் கற்பிட்டி பிரதேச சபைக்கு முன்னால் பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் இடம்பெற்றது.


இன நல்லுறவையும் சமூக ஒற்றுமையையும் பேணும் வகையில் இடம்பெற்ற இந் தன்சல் நிகழ்வில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ.எஸ் எதிரி சிங்க,  வை.எம்.எம்.ஏ யின் கற்பிட்டி கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.எமா ஷாபி, கற்பிட்டி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال