Breaking News

கற்பிட்டியின் முசல்பிட்டி சமூர்த்தி பயனாளிக்கு ரன் விமன விஷேட வீடு கையளிக்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏத்தாளை சமூர்த்தி வங்கியின் எல்லைக்குட்பட்ட முசல்பிட்டி கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த சன்முக லிங்கம் விஷ்வநாதன் எனும் சமூர்த்திப் பயனாளிக்கு ரன் விமன விசேட வீட மைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான வீடு கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (9) கற்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம். விமல இந்திக ஜயசிங்க தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கற்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் தினூஷா மதுரங்கி பெர்ணான்டோ, கற்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி உதவியாளர் டப்லியூ. அன்டன் சமந்த பெர்ணான்டோ, முசல்பிட்டி சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நிஸ்மி, திகழி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். ஆசீர் ஆகியோருடன் முசல்பிட்டி பிரதேச மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments

note