JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகர கிளையினால் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்த சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)


புத்தளம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகல் மற்றும் இரவுக்கான சமைத்த உணவு வழங்கும் மனிதாபிமான வேலைத் திட்டம் நேற்றும் (21) மூன்றாவது நாளாகவும் புத்தளம் அக்ஸா மஸ்ஜித் (இல்லியாஸ் வத்தை)  அல் அமீன் மஸ்ஜித் (இருவது வீடு)   குபா மஸ்ஜித் (குபா பகுதி) வாஹித் மஸ்ஜித் தாரிக் மஸ்ஜித் பலாஹ் மஸ்ஜித் (கடையாகுளம்) அஷ்ரப்பிய்யா மஸ்ஜித் (கடையாகுளம்) ஹஸனாத் மஸ்ஜித் நபீஸா மஸ்ஜித் (குவைத் வைத்தியசாலை பகுதி ) மணத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1250 குடும்பங்களுக்கு தேவையான பகல்  மற்றும் இரவு போசணம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் கடந்த மூன்று தினங்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளையின் அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை கொடுத்து  வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال