JobVibe.lk - Sri Lanka Job Portal

இன்றைய வானிலை

நாட்டிலும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்று முதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு  காற்றும் மழையுடனுமான வானிலையையும்  அதிகரித்துக் காணப்படும்.


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். 


சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி  மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் நன்பகல் 12  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


சப்ரகமுவ, மேல்  மற்றும் வடமேல்   மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தென் மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  


கடல் பிராந்தியங்களில் 

****************************


நாட்டை சூழ உள்ள  உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். இக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال