JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி - இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் இருந்து 388 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு...!

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர்.


வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி - உச்சமுனை கடற்படையினரால் இப்பந்தீவு கடல் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த பீடி இலைகள் அடைக்கப்பட்ட உர மூடைகள் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இதன்போது, 11 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 338 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.


எனினும் கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக குறித்த பீடி இலைகளை கொண்டுவந்தவர்கள் அதனை கடலிலேயே கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.


இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 338 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال