JobVibe.lk - Sri Lanka Job Portal

கிராம சேவையாளர் தரம் 03 க்கு வண்ணாத்தவில்லு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட எட்டு பேர்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும். புத்தளம் எம்.யூ.எம் சனூன் )

கிராம சேவையாளர் தரம் 3 க்கான பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலண்டு பயிற்சிக்கு புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து ஏழு விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களின் பெயர்கள் :

01. மொஹமட் தவ்பீக் நலீனா பர்வின்

02.  மொஹமட் ஜிப்ரி பாத்திமா இம்ரானா

03. பூனுதீன் மரைக்கார் பாத்திமா சப்னா

04. டோன் நித்ய மிலானி

05. ஜயசிங்க ஆராச்சிகே நிஷன்சலா சந்தமாலி

06. குலசூரிய ஆராச்சிகே இஷாரா ஜீவந்தி 

07. சமரகோன் முதியன்சலாகே மதுசானி தீப்திகா

08. சூரியலராச்சிகே லஹிறு டில்ஷான் விக்ரமசூரிய

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (08) காலை 10.30 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال