JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் "தாருஸ்ஸலாம் சுயகற்றல் பகுதி" உருவாக்கம்

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் "தாருஸ்ஸலாம் சுய கற்றல் பகுதி" புதிதாக (17)  உருவாக்கப்பட்டுள்ளது.


புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் பல்வேறு முன்மாதிரியான செயல்பாடுகள் தொடராக நடைபெற்று வருவது வழக்கம். 


அதில் இம்முறை மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் வகையில் "தாருஸ்ஸலாம் சுய கற்றல் பகுதி" என்ற பெயரில் மாணவர்களுக்கான கற்றல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இதன் மூலம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் சுய கற்றல் பகுதி  செயற்பாட்டுக்கு வந்துள்ளது.


தற்போதைய காலப்பகுதியில் வீட்டில் அமைதியான சூழலில் மாணவர்கள் கற்பது பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் ஒவ்வொரு மஸ்ஜிதும் மாணவர்களுக்கென சுய கற்றலுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற காலத்தின் தேவையை கருதி முன்மாதிரியாக தாருஸ்ஸலாம் மஸ்ஜிதில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


தாருஸ்ஸலாம் சுய கற்றல் பகுதியிலே விரும்பிய மாணவர்கள் வருகை தந்து சுய கற்றலில் ஈடுபடலாம். 


இதற்கு மேலதிகமாக பாடப்பகுதிகளில் விளக்கம் தேவைப்படும் பொழுது பிரதேச வாசிகளின் துறை சார்ந்தவர்கள் மூலம் அது விளக்கமளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال