ஜனாஸா அறிவித்தல் - கற்பிட்டி வசிப்பிடமாகக் கொண்ட பாத்திமா பீவி அவர்கள் காலமானார்.
கற்பிட்டி வசிப்பிடமாகக் கொண்ட LRC நிறுவனத்தில் கடாமை புரிந்து ஓய்வு பெற்ற முஹம்மது நிஜாம் அவர்களின் அன்பு மனைவி பாத்திமா பீவி அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்றவர்களான அ.சே.அ. அப்துல் ஹமீது மரைக்கார், காதர் பீவி ஆகியோரின் அன்பு மகளும், பஸீல் மரைக்கார் கடையாமோட்டை (கட்டார்), அப்ரூஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும், புத்தளம் 5ஆம் குறுக்குத்தெரு ஆயிஷா பீவி (புத்தளம் செய்னம்ப் பாடசாலை ஆசிரியை) ,காலம் சென்றவர்களான சேகு அலாவுதீன் மரைக்கார், நெய்னா மரைக்கார் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா விருதோடையில் அன்னாரது அன்புக் கணவரின் சகோதரர் ஹல்கி ஸமான் அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று (30) இரவு 9.00 மணிக்கு விருதோடை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
தகவல்
பஸீல் மரைக்கார்.
No comments