76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ISRC Sri Lanka, HRC Sri Lanka ,YMMA Central (Colombo district), AUMSA, Ramya lanka இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று (15) இடம்பெற்றது.
கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்தன நிலையத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெற்ற இரத்தான நிகழ்வில் "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் சுமார் 50ற்கும் மேற்பட்ட கொடையாளர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.










