JobVibe.lk - Sri Lanka Job Portal

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத் திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர், அமானா வங்கியின் கல்முனை நகரக் கிளை முகாமையாளர் எம்.ரி. நயீமுல்லாஹ், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சிபான் உள்ளிட்டோரும் பங்கேறிருந்தனர்.


தனியார் பங்களிப்புடனான நகர அழகுபடுத்தல் திட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத் திட்டத்திற்கு அமானா வங்கி அனுசரணை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.


கல்முனை மாநகர சபையின் கீழுள்ள 150 வீதிகளுள் முதற்கட்டமாக 40 வீதிகளுக்கு தற்போது பெயர்ப் பலகைகள் நிறுவப்படுகின்றன.


கல்முனை மாநகர பிரதேசங்களில் பெரும்பாலான வீதிகளுக்கு பெயர்ப் பலகைகள் இல்லாமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, இது விடயத்தில் அதிக கரிசனையுடன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இவ்வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத் திட்டத்திற்கு அமானா வங்கி அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post

نموذج الاتصال