JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - கனமூலை - மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த செய்னுல் ஆப்தீன் அவர்கள் காலமானார்.

கனமூலை - மிஹ்ராஜ்புரத்தைச் சேர்ந்த காலம் சென்ற இப்றாஹிம், ஹாஜரா உம்மா ஆகியோரின்   அன்பு மகன் செய்னுல் ஆப்தீன் அவர்கள் இன்று (26) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  பரீதா உம்மா    அவர்களின் அன்புக் கணவரும், முஹம்மது நளீம் மௌலவி, சித்தி முபீனா, பாத்திமா ரமீனா ஆகியோரின் அன்புத் தந்தையும், ரனீஸ், ரிஹான், நஸ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலம் சென்ற அபுல் ஹஸன், ஹாலிதீன், சம்சுதீன், கபூர், மிஸிரியா உம்மா, ஹைருன் நிஸா ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال