JobVibe.lk - Sri Lanka Job Portal

மயோன் முஸ்தபா - நினைவேந்தலும் "தடயங்கள்" நூல் வெளியீடும்.!

காலம் சென்ற முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் - மனித நேய மாமனிதர் மயோன் முஸ்தபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அவர் விட்டுச் சென்ற "தடயங்கள்" நூல் வெளியீடும் விரைவில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளன.


இதற்கான ஏற்பாடுகளை மனிதவள முகாமைத்துவ பேரவை மேற்கொண்டு வருகிறது.


குறித்த நூலில் மர்ஹூம் மயோன் முஸ்தாபா அவர்கள் மேற்கொண்ட உயரிய சமூகப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள், நாடு, சமூகம் மற்றும் பிராந்திய முன்னேற்றத்திற்கான அவரது எண்ணக்கருக்கள், தூரநோக்கு சிந்தனைகள் பதிவு செய்யப்படவுள்ளன.


அத்துடன் மயோன் முஸ்தபா தொடர்பாக உலமாக்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்பினர் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியோர், அவர் தொடர்பில் நல்லெண்ணம் கொண்டவர்களின் மனப் பதிவுகளை இந்நூலில் தொகுத்து வெளியிடுவதற்கும் மனிதவள முகாமைத்துவ பேரவை தீர்மானித்துள்ளது.


இதன் பிரகாரம் எவராயினும் மயோன் முஸ்தபா தொடர்பிலான தமது ஆக்கங்களும் இந்நூலில் இடம்பெற விரும்பினால் எதிர்வரும் 26.12.2023 ஆம் திகதிக்கு முன்னதாக ஒரு A4 பக்கத்திற்கு உட்பட்டதாக அமையும் வண்ணம் தமது புகைப்படத்துடன் hrmcouncil17@gmail.com எனும் ஈ மெயில் முகவரிக்கோ அல்லது 0775746881 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு மனிதவள முகாமைத்துவப் பேரவை அறிவித்துள்ளது.


நூலின் பக்கங்களையும் துரிதமான தொகுப்பையும் கருத்தில் கொண்டு எந்தெந்த ஆக்கங்களை உள்வாங்குவது என்பது தொடர்பில் நூலாசிரியர் குழுவின் முடிவே இறுதியானதாக அமையும்.


மேலும், மர்ஹூம் மயோன் முஸ்தாபா அவர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் வைத்திருப்பவர்களும் அவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


மேலதிக விபரங்கள் அவசியம் தேவைப்படுவோர் மாத்திரம் 0775746881 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال