JobVibe.lk - Sri Lanka Job Portal

பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!. 30 மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதி!.

அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் புத்தளம் - தெற்கு கோட்டத்திற்குட்பட்ட  கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 37 மாணவர்களுள் 30 மாணவர்கள் உயர் தரம் கற்க தகுதியைப் பெற்று 81.08% வீதப் சித்தியைப் பெற்று 13 வருடங்களுக்குப் பின்னர் சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம்.முஸ்னி தெரிவித்தார்.


இதேவேளை இப்பெறுபேற்றைப் பெறுவதற்கு ஆலோசனை, வழிகாட்டல் வழங்கிய முன்னாள அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா மற்றும் பிரதி அதிபர் நௌஸாத் அதேபோன்று வழிகாட்டிய வகுப்பாசிரியர்களான பிர்தௌஸியா, பர்மிளா, அவர்களோடு கற்பித்த பாட ஆசிரியர்கள் அதேபோன்று இதற்கு உதவி புரிந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழைய மாணவியர் சங்கம், கனமூலை பெரிய பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال