Breaking News

ஜனாஸா அறிவித்தல் - ஹுஸைனியாபுரம் அசன் நாச்சியா அவர்கள் காலமானார்.

மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும், தற்போது  ஹுஸைனியா புரத்தில் வசித்த்து வந்தவருமான அசன் நாச்சியா அவர்கள் இன்று (09) காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற முகம்மது காஸிம், நாகூர் உம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற சாஹுல் ஹமீட் முஹம்மது இமாம் அவர்ளின் அன்பு மனைவியும், அஸ்பரான், அஸ்ஹர், இம்றா, இஸ்ரா, ஆகியோரின் அன்புத் தாயாரும், றம்ஸீன் காலம் சென்ற சுல்பிக்கார் மற்றும் றவூபா உம்மா, றாஸியா,  மீரான் மொஹிதீன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (09/11/2023) பிற்பகல்  2 மணிக்கு கரம்பை முஸ்லிம்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இவ்வாசிரியைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


தகவல்

மகன் அஸ்பரான் 




No comments

note