கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு!.
கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமையன்று கனமூலை பெரிய பள்ளி வளாகத்தில் ஜும்ஆ முடிந்த பின் ஊர் ஜமாஅத்தினர் முன்னிலையில் இடம்பெற்றது.
குறித்த கட்டிடம் தாருஸ்ஸலம் வைத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை ISRC அமைப்பின் பணிப்பாளர் முஹம்மது மிஹ்ழார் அவர்களின் அனுசரணையில் அப்துர் ரஹ்மான் மௌலவி ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் அப்துர் ரஹ்மான் மௌலவி, இலங்கை ISRC அமைப்பின் பணிப்பாளர் முஹம்மது மிஹ்ழார், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.நஜீம் (ஷர்கி) , செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். இர்ஷாத் (கபூரி) உட்பட அதன் நிருவாக உறுப்பினர்கள், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகுஅலாவுதீன், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் உட்பட அதன் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.
DMC


















No comments