JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா அறிவித்தல் - புழுதிவயலை வசிப்பிடமாகக் கொண்ட செய்னுல் ஆப்தீன் நிஸார் அவர்கள் காலமானார்.

மதுரங்குளி  - தூங்குசேனையை பிறப்பிடமாகவும்,   புழுதிவயலை வசிப்பிடமாகவும் கொண்ட செய்னுல் ஆப்தீன் நிஸார் அவர்கள்   காலனார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  மர்ஹும்கலான செய்னுல் ஆப்தீன் முஹம்மது முத்து, ஆகியோரின் அன்பு மகனும், உம்மு ஹானீ உம்மாவின் அன்பு கணவரும்  மர்ஹும்கலான  ஜன்னத் பீவி முஹம்மது ஹனீபா, அப்துல் வாஹித், றஹுமா பீவி, அபுல் ஹஸன்* (பதிவாளர்) ஆகியோரின் சகோதரரும் ரிஸ்வான், ரிபான் பானு ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் புழுதிவயல் ஜும்ஆ பள்ளி மையவாடியில் இன்று (02) இஷா தொழுகையை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்:- சகோதரர் அபுல் ஹஸன்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال