JobVibe.lk - Sri Lanka Job Portal

இ - பெஸ்ட்(E -BEST) கல்வி நிறுவனத்தில் NVQ கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

இ - பெஸ்ட்(E -BEST)கல்வி  நிறுவனத்தின் கணினி (NVQ,CAA,ICTT) ஆங்கில டிப்ளோமா,சிங்கள கற்கை நெறி,கணினி கணக்கியல் உட்பட மேலும் பல  பாடநெறிகளை  பூர்த்தி செய்த மாணவ,மாணவியர்களுக்கு(E -BEST)கல்வியகத்தின் 16வது சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு,நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  பி.எம்.எம்.ஜவ்பர் தலைமையில் கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டபத்தில் சனிக்கிழமை(07)இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்,கெளரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலி,விசேட அதிதிகளாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்,தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பேராசிரியர் எம்.பி.எம்.இஸ்மாயில்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர்,கல்முனை  பிரதேச செயலக பிரதம நிர்வாக உத்தயோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,தென்கிழக்கு பல்கலைக்கழக நிதியியல் விரிவுரையாளர் எம்.சிராஜ்,மருதமுறை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ .எம்.நியாஸ்,சட்டத்தரணி அமீன் முஸ்தபா,(E BEST)கல்வியகத்தின்,தகவல் தொடர்பு தொழில்நுட்ப விரிவுரையாளர்களான எம்.ஏ.ஆர்.பாத்திமா சீமா,ஏ.ஆர்.சபைரா,பாட ஒருங்கிணைப்பாளர் பி.வெனிட்டா ஷெரோமி,இரண்டாம் மொழி சிங்கள வளவாளர் ஏ.வீ.ஆரிபீன்,கணனி கணக்கியல் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.பாரிஸ்,உட்பட  மாணவர்களின் பெற்றோர்கள்,இ் - பெஸ்ட்(E -BEST)கல்வி  நிறுவனத்தின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இ் - பெஸ்ட்(E -best) கல்வி  நிறுவனமானது மாணவர்களின் கல்வி  நடவடிக்கைகளுக்காக கல்முனை,ஹற்றன்,பொலன்னறுவையில் பிரதேசங்களில் தற்போது  கிளைகள் காணப்படுவதுடன் மேலும் மாணவர்களின் கல்வி வளரச்சியில்  பல்வேறு சமூக நல பணியினை மேற்கொண்டு  வருவதுடன், 09 ஆவது ஆண்டில் கால்பதித்து விரைவில் 10வது தசாப்தத்தை  பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال