JobVibe.lk - Sri Lanka Job Portal

2023ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல்

(சர்ஜுன் லாபீர்) 

புதிய ஆண்டின்(2023) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(02)காலை 8.58 மணிக்கு கல்முனை  பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  நடைபெற்றது. 


மலரும் 2023ஆம் ஆண்டில் சமூக , பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. 


வரலாற்றில் முன்னொருபோதும் அனுபவித்திராத பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் வாழ்க்கை மிகவும் கஷ்ட நிலைக்கு முகங்கொடுத்துள்ள இக்காலப் பகுதியில் , உலகில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நாடுகள் அந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கு அறிமுகப்படுத்திய மறுசீரமைப்புக்கள் பற்றிய அனுபவங்களை ஆராய்ந்து அரச சேவையில் தேவையான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கும் . அரச செலவுகளைக் குறைத்து அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும் நீங்கள் அனைவரும் முன்னரை விடக் கவனம் செலுத்துதல் வேண்டும்.


மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்

ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீlல், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் ஜனூபா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) எம்.மயாஸ்,,நிதி உதவியாளர் எம்.ஜலீல் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கொண்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال